ஹேமா கமிஷன் அறிக்கை.. பதில் சொல்ல மறுக்கும் ரஜினி உட்பட பிரபல நடிகர்கள்..!

  • IndiaGlitz, [Monday,September 02 2024]

கேரளாவில் உள்ள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக ஹேமா கமிஷன் அறிக்கை தெரிவித்துள்ள நிலையில் இந்த கமிஷனின் அறிக்கை குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முன்னணி நடிகர்கள் மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவை தற்போது ஹேமா கமிஷன் அறிக்கை புரட்டி போட்டு உள்ள நிலையில் நடிகர் மோகன்லால் உட்பட நடிகர் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் திடீரென ராஜினாமா செய்தார்கள் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ஹேமா கமிஷன் குறித்து தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் போது பலர் மௌனத்தை பதிலாக தருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் அறிக்கை பற்றி கேட்டபோது அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் கூறிவிட்டு நழுவி விட்டார்.

அதேபோல் ஜீவாவிடம் இந்த கேள்வியை கேட்ட போது அனைத்து துறைகளிலும் இந்த பிரச்சனை உள்ளது என்றும் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதே கேள்வியை மீண்டும் கேட்டபோது தமிழ் திரையுலகில் இந்த பிரச்சனை இல்லை என்றும் இந்த கேள்வியை நீங்கள் மலையாள நடிகர்களை தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதே போல் நேற்று கார்த்தி நடித்த ’மெய்யழகன்’ திரைப்பட ஆடியோ விழாவில் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது கார்த்தி இந்த கேள்விக்கான பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகர்கள் ஹேமா கமிஷன் குறித்து பதில் சொல்லாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

கார்த்தியின் அடுத்த படத்தில் இணைந்த கமல்ஹாசன்.. நன்றி தெரிவித்த சூர்யா..!

கார்த்தி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் சூர்யா அவருக்கு தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

 சான் பிரான்சிஸ்கோவில் தமிழ் திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்.. இயக்குனருக்கு வாழ்த்து..!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக சென்ற நிலையில் அங்கு அவர் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்த்து வருகிறார்

தியேட்டர் தெறிக்கும்... Blackbuster Confirm.. Goat குறித்து Vibe ஆன வைபவ்

நடிகர் வைபவ், சென்னை 600028 , சரோஜா, கோவா, மங்காத்தா என வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் வட்டம் வைத்திருப்பவர்.

தியேட்டர்ல யாரும் போன் பார்க்கக்கூடாது.... விஜய் போனபிறகு என்னவாகும் சினிமா ?

AGS தயாரிப்பு நிறுவனத்தின் 25 வது படம் GOAT ஆகும். அர்ச்சனா கல்பாத்தி, AGS தயாரிப்பு நிறுவனத்தின் CEO ஆவார். GOAT திரைப்படத்தின் Creative கூடுதலாக தளபதி விஜயின் தீவிர ரசிகையும் ஆவார்.

தளபதி is the Goat, என்னது ? தோனி கேமியோ ரோல் பண்ணிருக்காரா ?

வெங்கட் பிரபு இயக்குநராகவும், நடிகராகவும் அறியப்பட்டவர். சென்னை 600028, சரோஜா,பிரியாணி, கோவா, மங்காத்தா மற்றும் மாநாடு போன்ற வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர்.