நீண்ட இடைவெளிக்கு பின் மகனை பள்ளிக்கு அழைத்து செல்லும் தமிழ் நடிகர்! பெற்றோர்களுக்கு அறிவுரை

  • IndiaGlitz, [Tuesday,February 01 2022]

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தமிழ் நடிகர் ஒருவர் பெற்றோர்களுக்கு தனது அறிவுரையையும் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டடாலும், ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மீண்டும் ஒருசில நாட்களில் பள்ளிகள் மூடப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிபிராஜ் தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பதிவில், ‘இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் பள்ளிக்கு செல்கிறோம். அதே வயதுடைய குழந்தைகளுடன் தொடர்பு கொள்வது அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். எனவே அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் தகுதி உடையவர்களாக இருந்தால், நோய் அறிகுறி இல்லாதவர்களாக இருந்தால் பள்ளிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு,

”காவல்துறை உங்கள் நண்பன்” படக்குழுவின் அடுத்த படம்!

காவல்துறை உங்கள் நண்பன்”  படக்குழுவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது

தனது கழிவறைக்கு காவல் வைத்த அதிபர்… தவறினால் மரணத் தண்டனையா?

மர்மத்திற்குப் பஞ்சம் இல்லாத வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் சமீபத்தில் எங்கு சென்றால் கையடக்க கழிவறையை எடுத்துச்

என்ன மியா கலீஃபா இறந்துட்டாரா? வதந்திக்கு நெத்தியடி பதில் கொடுத்த மியா!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ஆபாச பட அழகியும் தற்போதைய

ஜோதிகாவின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல்!

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக இருந்த நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பின் சில ஆண்டுகள் திரை உலகிலிருந்து விலகி இருந்தார்.