close
Choose your channels

மகள் அறிமுகமாகும் படத்தை இயக்கும் பிரபல தமிழ் திரையுலகின் நடிகர்!

Saturday, May 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர், தனது மகள் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக ஆக்சன் கிங் நடிகராக இருந்து வருபவர் அர்ஜுன். இவர் நடிகராக மட்டுமின்றி சில படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, தமிழில் 2013ஆம் ஆண்டு வெளியான விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததை அடுத்து அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

இந்த நிலையில் தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ள ஆக்சன்கிங் அர்ஜூன், அந்த படத்தை அவரே இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் இந்த படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார்.

இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment