2வது முறையாக கர்ப்பமான தமிழ் நடிகரின் மனைவி.. ரசிகர்கள் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் நடிகருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளதையடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவர் கணேஷ் வெங்கட்ராமன். பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், த்ரிஷா நடித்த ’அபியும் நானும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன்பின் கமல்ஹாசன் நடித்த ’உன்னை போல் ஒருவன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் கணேஷ் நடிகை நிஷா கிருஷ்ணன் என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2019 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது நிஷா மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இருகுறித்த புகைப்படத்துடன் கூடிய தகவல் நிஷா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout