close
Choose your channels

'பத்து தல' படத்தின் பிரபல நடிகரின் மனைவி ஐட்டம் டான்ஸா?

Thursday, March 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள ‘பத்து தல’ என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இந்த படத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்ற தகவலை இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி இந்த படத்தில் நடிகை சாயிஷா ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ளதாக தெரிகிறது.

இது குறித்த புகைப்படங்களும் இணையதளத்தில் கசிந்து உள்ள நிலையில் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை படம் வெளியான பிறகு தெரிந்து கொள்வோம். மேலும் இந்த ஐட்டம் டான்ஸில் ஆர்யாவும் சேர்ந்து ஆடி இருப்பாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன், அனு சித்தாரா, டிஜே அருணாசலம், ரெடின் கிங்ஸ்லி, மனுஷ்யபுத்திரன், செண்டாயன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். பரூக் பாஷா ஒளிப்பதிவில் ப்ரவீன் கே.எல். படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment