தமிழக கிரிக்கெட் அணியில் இடம்.. மகனை நினைத்து பெருமைப்படும் தமிழ் நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் நடிகர் ஒருவர் தனது மகனுக்கு U-14 தமிழக கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளது என பெருமையாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.
தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விக்ராந்த். தளபதி விஜய்யின் உறவினரான இவர் தற்போது ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விக்ராந்த் சிசிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பதும் இவர் உண்மையிலேயே ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விக்ராந்த் மகன் யாஷு என்பவர் தற்போது 14 வயதுக்கு உட்பட்ட தமிழக கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார். இது குறித்து புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, மகனை நினைத்து தனக்கு பெருமையாக இருப்பதாகவும் அவர் எதிர்காலத்தில் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்பதுதான் தனது கனவு என்றும் அதற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து ரசிகர்கள் விக்ராந்த் மகனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Happiest day as a dad !! Can’t be more proud of you Yashu .. U-14 Tamilnadu state cricket team 🏏
— Vikranth Santhosh (@vikranth_offl) January 20, 2024
1st step of a long journey... wishing u all the best for achieving all your dreams.. Thx to God 🙏🏽#tnca #yashwanth #goa #superprouddad pic.twitter.com/6ec3x93y8U
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments