ஒமிக்ரான் ஒன்னும் செய்யாது, மனசுல தெம்ப வளர்த்துகோங்க: பிரபல நடிகர் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி மனித குலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒமிக்ரான் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், அது ஒன்றும் செய்யாது என்றும் மனதில் தெம்பை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் பிரபல நடிகர் ஒருவர் டுவிட் செய்துள்ளார்.
இந்த புத்தாண்டை நல்லவிதமாக வரவேற்கும் வகையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பதாவது: அனைவருக்கும் எனது இனிய மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்கள். ஓமிக்ரான் பத்தி ரொம்ப கவல படாதீங்க, அது இன்னும் பத்து டிசைன்ல மாறி மாறி வரும், உடம்புலயும் மனசுலயும் தெம்ப வளத்துக்கங்க, நமக்கு ஒன்னும் ஆகாது’ என்று ஒமிக்ரான் குறித்து பாசிட்டிவ்வாக பதிவு செய்துள்ளார்
உலகமே ஒமிக்ரான் குறித்த அச்சத்தில் இருக்கும் நிலையில் புத்தாண்டு தினத்தன்று நம்பிக்கையூட்டும் விஜய் ஆண்டனியின் டுவீட்டுக்கு பலர் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்
இந்த நிலையில் விஜய் ஆண்டனி தற்போது ’தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’, ‘பிச்சைக்காரன் 2’ மற்றும் ‘கொலை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அனைத்தும் இந்த ஆண்டு ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Dear friends??
— vijayantony (@vijayantony) January 1, 2022
Wish you all a very happy new year??
ஓமிக்ரான் பத்தி ரொம்ப கவல படாதீங்க??
அது இன்னும் பத்து டிசைன்ல மாறி மாறி வரும்??
உடம்புலயும் மனசுலயும் தெம்ப வளத்துக்கங்க??
நமக்கு ஒன்னும் ஆகாது??????
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments