பிரபல தமிழ் குணசித்திர நடிகர் காலமானார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வைதேகி காத்திருந்தாள், சிந்துபைரவி, விக்ரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் டிஎஸ் ராகவேந்திரா இன்று காலமானார்
வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் ரேவதியின் அப்பாவாகவும் சிந்து பைரவி படத்தில் நீதிபதியாகவும் நடித்து புகழ் பெற்றவர் டிஎஸ் ராகவேந்திரா. நடிகர் மட்டுமின்றி இவர் ஒருசில படங்களுக்கு இசையமைக்கவும் செய்துள்ளார்.
இந்த நிலையில் டிஎஸ் ராகவேந்திரா இன்று சென்னையில் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. மறைந்த டிஎஸ் ராகவேந்திரா உடல் அவருடைய கேகே நகர் வீட்டில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய உடலுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
மேலும் மறைந்த குணசித்திர நடிகர் டிஎஸ் ராகவேந்திரா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாக பல திரையுலக கலைஞர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்
Actor #TSRaghavendhar passed away.... final rites at 2:pm today Old No:21 New No:39,Ponnamballam Salai West K K Nagar Chennai-78 - RIP! pic.twitter.com/z8SlIsYeiK
— NadigarSangam PrNews (@NadigarsangamP) January 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments