உங்கள் கூகுள்பே நம்பரை அனுப்புங்கள்: எலான் மஸ்க்கை கலாய்த்த தமிழ் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருக்கும் பயனாளிகள் 8 டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்த நிலையில் அதை கேலி செய்யும் வகையில் தமிழ் நடிகர் ஒருவர் உங்கள் கூகுள்பே நம்பரை அனுப்புங்கள் என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் என்பதும் அதற்கு பிறகு அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ உள்பட பல முக்கிய நிர்வாகிகளை அவர் நீக்கினார்.
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என நேற்று இரவு எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். 8 டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 640 ரூபாய் வரை ஆகும் என்பதும் இந்தியாவில் புளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் மாதம் 640 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த தமிழ் நடிகர் சிபிராஜ் உங்கள் கூகுள்பே நம்பரை அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளார். சிபிராஜூம் டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க்கை கலாய்க்கும் வகையில் சிபிராஜ் பதிவு செய்துள்ள இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.
Pls send me your Gpay number. https://t.co/BXhd1aaCJF
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) November 2, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments