பாஜகவில் இணைந்த மற்றொரு தமிழ் நடிகர்: குஷ்பு இணைந்து போஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் இணையும் திரையுலக பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே.
ஏற்கனவே பாஜகவில் பல திரையுலக நடிகர் நடிகைகள் இணைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளார். அவர்தான் நடிகர் சுப்பு பஞ்சு. பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்களின் மகனான சுப்பு பஞ்சு பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் இன்று பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி அவர்கள் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். பாஜகவில் சுப்பு பஞ்சு இணைந்ததை அடுத்து குஷ்பு அவருடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
பல திரைப்பட நடிகர் நடிகைகள் பாஜகவில் தொடர்ச்சியாக இணைந்து வரும் நிலையில் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் ஒரு சில பிரபலங்கள் பாஜகவின் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் இன்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் எல்.சிவராமகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
My goodest buddy @subbu6panchu joins @BJP4India . I am so happppppyyyy.. pic.twitter.com/dizVR8rLPU
— KhushbuSundar ❤️ (@khushsundar) December 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com