நான் பொய் சொல்ல விரும்பவில்லை, எனக்கும் முதலமைச்சர் ஆசை உள்ளது: பிரபல தமிழ் நடிகர்..!

  • IndiaGlitz, [Wednesday,May 31 2023]

எனக்கு முதலமைச்சர் ஆகும் ஆசை உள்ளது, முதலமைச்சர் ஆசை இல்லை என்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை, என்னுடைய கட்சி தொண்டர்கள் என்னை முதலமைச்சராக்க ஆசைப்படுகிறார்கள் என்று பிரபல தமிழ் நடிகர் தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழ் நடிகர்களில் ஒருவர் சரத்குமார் நேற்று அவர் நடித்த ’போர் தொழில்’ என்ற படத்தின் டிரைலர் ரிலீஸ் விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் அவற்றின் செய்தியாளர்களிடம் பேசிய போது ’ஒரு கட்சி தொண்டர்களிடம் அவரது கட்சி தலைவரை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்புதான், அந்த ஆசை எனக்கும் உள்ளது, இதை நான் மறுக்கவில்லை, முதலமைச்சர் ஆசை இல்லை என நான் பொய் சொல்ல விரும்பவில்லை என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் முதலமைச்சர் ஆவதற்கு தீவிரமாக முயற்சிப்பேன், யார் வேண்டுமானாலும் முயற்சி செய்வதில் தப்பில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் 150 ஆண்டுகள் வரை வாழும் ரகசியம் குறித்து கூறிய போது அந்த கூட்டத்தில் சுற்றி இருப்பவர்களின் இறுக்க நிலையை தளர்வுபடுத்த வேண்டும் என்பதற்காக காமெடியாக பேசினேன், நான் சொன்னது இவ்வளவு பெரிய செய்தியாகும் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று தெரிவித்தார். மேலும் யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி கூட்டத்தில் ’தனக்கு 69 வயது ஆகிறது என்றும் தான் தற்போது 25 வயது இளைஞன் போலிருக்கிறேன் என்றும் 150 வயது வரை நான் உயிருடன் இருப்பேன் என்றும் அதற்கான வித்தை நான் கற்று வைத்துள்ளேன் என்று சரத்குமார் கூறியிருந்தார். அந்த வித்தையை 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் என்னை முதலமைச்சர் ஆக்கினால் அனைவருக்கும் சொல்வேன் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.