நானும் கிரிக்கெட் மைதானம் உருவாக்குவேன்: நடராஜன் முன்னிலையில் அறிவிப்பு வெளியிட்ட நடிகர்..!

  • IndiaGlitz, [Saturday,June 24 2023]

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் அமைத்துள்ள நிலையில் அவரைப் போலவே நானும் கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்குவேன் என இந்த மைதானத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ் நடிகர் தெரிவித்துள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ’நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார்



இந்த மைதானத்தை தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் என்பதும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் யோகி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் இந்த மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் யோகி பாபு பேசிய போது ’நடராஜன் கிரிக்கெட் மைதானம் கட்டி இருப்பதை போலவே நானும் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டி சிறந்த வீரர்களை உருவாக்குவேன். ஐபிஎல் ம் டிஎன்பிஎல் ஆகியவற்றில் தற்போது இளைஞர்கள் அதிகம் விளையாடுவதால் திறமையானவர்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதனால் கண்டிப்பாக விரைவில் ஒரு மைதானம் அவர்களுக்காக காட்டுவேன் என்று கூறியுள்ளார்.



மேலும் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் சேவாக் என்றும் நடராஜனையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்தார்.