பாஜகவுடன் கூட்டணி வைத்த பிரபல தமிழ் நடிகரின் கட்சி.. வரவேற்பு தெரிவித்த அண்ணாமலை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக உடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக பிரபல நடிகர் அறிவித்துள்ளதை அடுத்த அவருடைய கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ் நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ,பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் திரு.அரவிந்த் மேனன் அவர்கள் பிப்ரவரி 28 ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து, பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதில் ஒருமித்த கருத்துக்கள் உடன்பட்டதால் நேற்று (05.03.2024) மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. L.முருகன் அவர்கள், தேசிய செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. H.ராஜா அவர்கள், பாஜக தமிழக பொறுப்பாளர் மற்றும் தேசியச் செயலாளர் திரு.அரவிந்த் மேனன் அவர்கள் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கனவே எனக்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்கள் பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விவரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன். நன்றி, வணக்கம்
பாரதிய ஜனதா கூட்டணியில் சரத்குமார் கட்சி இணைந்ததை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்று தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பத்தாண்டு கால, ஊழலற்ற, நேர்மையான அரசின் செயல்பாடுகள் மீது முழு நம்பிக்கை கொண்டும், தேச நலனிற்காகவும், ஒருமைப்பாட்டிற்க்காகவும் நமது பிரதமர் அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களால் ஈர்க்கப்பட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்பட முன்வந்திருக்கும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர், அண்ணன் திரு சரத்குமார் அவர்களை தமிழக பாஜக சார்பாக வரவேற்று மகிழ்கிறோம்.
வரும் பாராளுமன்ற தேர்தலில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் நேரத்தில், தேசியத்தின் மற்றொரு குரல் அண்ணன் திரு சரத்குமார் அவர்கள் வரவு, தமிழகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிச்சயம் உந்து சக்தியாக அமையும் என்பது உறுதி
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் பத்தாண்டு கால, ஊழலற்ற, நேர்மையான அரசின் செயல்பாடுகள் மீது முழு நம்பிக்கை கொண்டும், தேச நலனிற்காகவும், ஒருமைப்பாட்டிற்க்காகவும் நமது பிரதமர் அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களால் ஈர்க்கப்பட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்… https://t.co/2iCeRDYuwG
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 6, 2024
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடனான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு@narendramodi @AmitShah @MenonArvindBJP @Murugan_Mos@annamalai_k @BJP4India @BJP4TamilNadu @HRajaBJP#PMModi @sajeevpbjp pic.twitter.com/QyA9c98pox
— R Sarath Kumar (@realsarathkumar) March 6, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments