மனைவி, குழந்தைகளுடன் இயற்கை விவசாயம் செய்யும் தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகினர் தாங்கள் சம்பாதித்த பணத்தை ஹோட்டல், ஐடி, பங்குச்சந்தை உள்பட பல்வேறு இடங்களில் முதலீடு செய்து வரும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் இயற்கை விவசாயம் செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கிஷோர். அதன் பிறகு அவர் ’ஜெயங்கொண்டான்’ ’சிலம்பாட்டம்’ ’வெண்ணிலா கபடி குழு’ ’போர்க்களம்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ ’சார்பாட்டா பரம்பரை’ உள்பட அவர் நடித்த படங்கள் பல படங்கள் வெற்றியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது கல்லூரி கால தோழியான விசாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்ட கிஷோருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படப்பிடிப்பு போக மீதம் உள்ள நேரங்களில் அவர் தனது குடும்பத்துடன் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர். அதுமட்டுமின்றி தனது குழந்தைகளுக்கும் அவர் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்து வருகிறார்.
லாப நோக்கத்திற்காக இல்லாமல் இந்த இயற்கை விவசாயத்தை தான் செய்து வருவதாக பல பேட்டிகளில் கிஷோர் கூறியுள்ளார். மேலும் பெங்களூரில் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை விற்பனை செய்யும் கடையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கிஷோர் தனது மனைவி மகன்களுடன் இயற்கை விவசாயம் செய்யும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com