ஏதுமறியா குழந்தைப்போல் உறங்குகிறாள்: தாய் உடல்நலக்குறைவு குறித்து தமிழ் நடிகரின் பதிவு..!

  • IndiaGlitz, [Sunday,March 05 2023]

தமிழ் நடிகர் ஒருவரின் தாயார் உடல் நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கவிதை வடிவில் தனது வருத்தமான உணர்ச்சிகளை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ’அது இது எது’ உட்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் நடிகர் ஜெகன். இவர் சூர்யா நடித்த ’அயன்’ உள்பட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ஜெகனின் தாயார் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜெகன் மிகவும் வருத்தம் அடைந்து தனது இன்ஸ்டாகிராமில் கண்ணீருடன் கவிதை வடிவில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு இதோ:

என் தாய்
சேயாகிறாள்

உடல் நலம் குறைந்நு
எங்களை ஈன்றவள்
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்

ஏதுமறியா
குழந்தைப்போல்
உறங்குகிறாள்

எங்களை ஈன்றபோது
எத்தனை இரவுகள்
இப்படிதானே
கவலை தோயத்த
அக்கறையுடன் எங்களை
கவனித்திருப்பாய்.

இந்த ஓர் இரவில்
என் நன்றி கடனை
திரும்ப தர இயலாது
என்பதை எண்ணி
கூனிப்போகிறேன்.

உன் நலம் வேண்டி
என் சிவனை வேண்டுகிறேன்.

More News

ரஜினிகாந்த் நண்பரின் மகன் திருமணம்.. முன்னாள் அமைச்சரின் மகள் தான் மணமகளா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரின் மகனுக்கு திருமணம் நடந்துள்ள நிலையில் அவரை மணந்துள்ளவர் முன்னாள் அமைச்சரின் மகள் என்பது தெரியவந்துள்ளது. 

சூப்பர் சிங்கர் விவகாரம்.. டிஜே பிளாக்கை சரமாரி கேள்வி கேட்ட பூஜா..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளராக இருக்கும் பூஜாவுக்கு ரொமான்ஸ் பாடல்கள் அதிகம் போடுவதாக அவரது பெரியம்மா டிஜே பிளாக் மீது குற்றம் சாட்டிய புரோமோ வீடியோ வைரலான நிலையில்

ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குறது கத்தியால மட்டுமல்ல, பலமான கைகளாலும் தான்.. 'கப்ஜா' டிரைலர்..!

பிரபல கன்னட நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'கப்ஜா' என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர்

'நான் படிக்காத அடியாளு, நீ படிச்ச அடியாளு'.. ஜெயம் ரவியின் 'அகிலன்' டிரைலர்..!

ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சென்னையில் பரவும் புதிய காய்ச்சலுக்கு இதுதான் காரணம்… ICMR விளக்கம்!

சென்னையில் காய்ச்சல் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.