close
Choose your channels

முதல்வர் ஸ்டாலினை அமெரிக்காவில் சந்தித்த தமிழ் நடிகர்.. குடும்பத்துடன் எடுத்த புகைப்படம்..!

Tuesday, September 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த நிலையில், அங்கு அவரை தமிழ் நடிகர் ஒருவர் குடும்பத்துடன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றார் என்பதும், தமிழகத்திற்கு தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த ஏராளமான தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்த்தார் என்பதும் ஏற்கனவே நாம் பார்த்தோம்.

இந்த நிலையில், முதல்வர் அமெரிக்க பயணத்தின் போது, நடிகர் நெப்போலியன் தனது குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலினையும், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினையும் சந்தித்ததாகவும், இது குறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதால், முதல்வரின் அமெரிக்க பயணத்தின் போது இந்த சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடிகர் நெப்போலியன் திமுகவில் இருந்தவர் என்பதும், திமுக எம்பி ஆக மட்டுமின்றி மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment