முதல்வர் ஸ்டாலினை அமெரிக்காவில் சந்தித்த தமிழ் நடிகர்.. குடும்பத்துடன் எடுத்த புகைப்படம்..!

  • IndiaGlitz, [Tuesday,September 17 2024]

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த நிலையில், அங்கு அவரை தமிழ் நடிகர் ஒருவர் குடும்பத்துடன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றார் என்பதும், தமிழகத்திற்கு தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த ஏராளமான தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்த்தார் என்பதும் ஏற்கனவே நாம் பார்த்தோம்.

இந்த நிலையில், முதல்வர் அமெரிக்க பயணத்தின் போது, நடிகர் நெப்போலியன் தனது குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலினையும், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினையும் சந்தித்ததாகவும், இது குறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதால், முதல்வரின் அமெரிக்க பயணத்தின் போது இந்த சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடிகர் நெப்போலியன் திமுகவில் இருந்தவர் என்பதும், திமுக எம்பி ஆக மட்டுமின்றி மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு.. 'விடாமுயற்சி' அறிவிப்பு எப்போது?

அஜித் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும்

'வேட்டையன்' படத்தின் மஞ்சு வாரியர் கேரக்டர்.. மாஸ் வீடியோவை வெளியிட்ட லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம்

பாலிவுட் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா சூர்யா? சூப்பர் ஹிட் படத்தின் 4ஆம் பாகம்..!

பாலிவுட்டில் உருவாகும் சூப்பர் ஹிட் படத்தில், நான்காவது பாகத்தில் சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே படத்தில் ஷாருக்கான், சல்மான்கான், ரன்வீர்சிங், ரன்பீர் கபூர்.. அறிமுக இயக்குனருக்கு ஜாக்பாட்..!

ஒரு திரைப்படத்தில் இரண்டு பிரபலங்கள் சேர்ந்து நடிப்பது அரிதான ஒன்று, ஆனால் ஒரே படத்தில் ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர் மற்றும் ரன்வீர் சிங் ஆகிய நான்கு பிரபல நடிகர்களும்

த்ரிஷாவுக்காக ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த குத்துப்பாட்டு.. இன்னொரு 'மட்ட' சாங் ரெடியா?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் 'மட்ட' என்ற பாடலில், விஜய் மற்றும் த்ரிஷா அட்டகாசமாக நடனமாடி இருப்பார்கள் என்பதும், இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தே.