5 லட்சம் கொடுத்தால் 500 கோடி: கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த தமிழ் ஹீரோ

  • IndiaGlitz, [Tuesday,March 22 2022]

தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் இரிடியம் மோசடி கும்பலிடம் கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததை அடுத்து அவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’கிழக்குசீமையிலே’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விக்னேஷ். அதன்பின் பசும்பொன் உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இந்த நிலையில் தற்போது சொந்தமாக தொழில் செய்து வரும் விக்னேஷின் வாடிக்கையாளர் ராம்பிரபு என்பவரை நம்பி இரிடியம் மோசடி கும்பலிடம் 1.82 கோடி பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

ரூ. 5 லட்சம் கொடுத்தால் 500 கோடி லாபம் கிடைக்கும் என ராம் பிரபு என்பவர் கூறியதை நம்பி இந்த பணத்தை அவரிடம் கொடுத்ததாகவும் ஆனால் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் அதற்கான லாபத்தையும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளதாகவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் நடிகர் விக்னேஷ் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.