5 லட்சம் கொடுத்தால் 500 கோடி: கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த தமிழ் ஹீரோ

  • IndiaGlitz, [Tuesday,March 22 2022]

தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் இரிடியம் மோசடி கும்பலிடம் கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததை அடுத்து அவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’கிழக்குசீமையிலே’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விக்னேஷ். அதன்பின் பசும்பொன் உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இந்த நிலையில் தற்போது சொந்தமாக தொழில் செய்து வரும் விக்னேஷின் வாடிக்கையாளர் ராம்பிரபு என்பவரை நம்பி இரிடியம் மோசடி கும்பலிடம் 1.82 கோடி பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

ரூ. 5 லட்சம் கொடுத்தால் 500 கோடி லாபம் கிடைக்கும் என ராம் பிரபு என்பவர் கூறியதை நம்பி இந்த பணத்தை அவரிடம் கொடுத்ததாகவும் ஆனால் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் அதற்கான லாபத்தையும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளதாகவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் நடிகர் விக்னேஷ் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

More News

அதிரடி ஆக்சன் காட்சிகளில் டூப் இன்றி நடித்த சமந்தா! 

பிரபல நடிகை சமந்தா அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் டூப் இன்றி நடித்ததாகவும் அவருக்கு ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் பயிற்சி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 

ரொமாண்டிக் வெப்தொடரில் பிக்பாஸ் மஹத்:  டைட்டில் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் மஹத், ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ஒரு ரொமான்டிக் வெப்தொடரில் நடித்துள்ளார்.

'தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' ரிலீஸ் தேதியை அறிவித்த சன்பிக்சர்ஸ்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து நேற்று சென்சார் செய்யப்பட்டது என்பதும்

ஷங்கரின் சூப்பர்ஹிட் வெற்றிப்படத்தின் 2ஆம் பாகத்தில் நயன்தாரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான 'ஜென்டில்மேன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தில் லேடி சூப்பர்

அடுத்தடுத்த வாரத்தில் ரிலீஸ் ஆகும் செல்வராகவனின் இரண்டு படங்கள்!

செல்வராகவனின் இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.