பிரபல நடிகருக்கு நெஞ்சுவலியா? அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் பிரபல நடிகருக்கு நெஞ்சுவலி என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அந்த செய்தி பொய் என்பதை அந்த நடிகர் உறுதி செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் விமல் என்பதும் அவர் தற்போது ’சண்டக்காரி’, ‘எங்க பாட்டன் சொத்து’, ‘மஞ்சள் கூடை’, ‘குலசாமி’, ‘லக்கி’ உள்பட ஒருசில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நடிகர் விமலுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. மேலும் அவர் மருத்துவமனையில் படுத்திருப்பது போன்ற புகைப்படமும் வைரல் ஆனது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எடுத்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது என்றும் விமலுக்கு நெஞ்சுவலி என்பது பொய்யான தகவல் என்றும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இன்று அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தையும் அவரது தரப்பினர் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து நடிகர் விமலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் எனவே அவரைப் பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் விமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலமுடன் படப்பிடிப்பிலிருந்து ☺️ pic.twitter.com/AczgOc2cXD
— Actor Vemal (@ActorVemal) January 6, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout