ஆந்திரா, தெலுங்கானா வெள்ளம்.. நிவாரண நிதியை அள்ளிக் கொடுத்த மாஸ் தமிழ் நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வெள்ள நிவாரண நிதியாக தெலுங்கு திரை உலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் கோடி கணக்கில் நிவாரண நிதி அளித்துள்ள நிலையில் முதல் முறையாக தமிழ் நடிகர் மாஸ் தமிழ் நடிகர் ஒருவர் தெலுங்கானா, ஆந்திரா வெள்ள நிவாரண நிதி அளித்துள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் உடமைகளை பறிகொடுத்து முகாம்களில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆந்திரா தெலுங்கானா முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தெலுங்கு திரை உலக பிரபலங்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். குறிப்பாக சிரஞ்சீவி, பாலையா, பிரபாஸ், மகேஷ் பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் உள்ளிடோர் கோடி கணக்கில் நிதி அளித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் மாஸ் நடிகர்களில் ஒருவரான சிம்பு ஆந்திரா, தெலுங்கானா வெள்ள நிவாரண நிதியாக 6 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். தமிழ் நடிகர் ஒருவர் ஆந்திரா தெலுங்கானா வெள்ள நிவாரண நிதியாக கொடுத்துள்ளதை அடுத்து அவருடைய பெருந்தன்மையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments