வயநாடு நிலச்சரிவு.. இரங்கல் மட்டும் தெரிவிக்காமல் லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்த நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தமிழ் திரை உலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் பிரபல நடிகர் இரங்கல் மட்டும் தெரிவிக்காமல் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் லட்சக்கணக்கில் மீட்பு பணிக்கு நன்கொடையாக பிரபல தமிழ் நடிகர் ஒருவர் வழங்கியுள்ளார்
கேரள மாநிலம் வயநாடு அருகே 3 கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமானோர் உயிர் இழந்திருப்பதாகவும் இன்னும் நூற்றுக்கணக்கான நபர்களை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த பகுதியில் இரவு பகலாக மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சோக நிகழ்வுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கேரள முதல்வரிடம் துயர நிகழ்விற்கான நிவாரண நிதியாக ரூபாய் 20 லட்சம் வழங்கியுள்ளார்.
மேலும் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் உயிர் இழந்தோருக்கு தனது ஆழ்ந்த இரங்கல் என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்கிறேன் என்றும் இந்த நிகழ்வால் தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com