'விக்ரம்' படக்குழுவினர்களுக்கு விருந்து வைத்த தமிழ் நடிகர்!

  • IndiaGlitz, [Tuesday,June 21 2022]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழகத்திலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்ற 'பாகுபலி’ படத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’விக்ரம்’ படம் ஒட்டு மொத்தமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் மட்டும் ரூ.500 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ’விக்ரம்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது என்பதும் இதில் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், லோகேஷ் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த வெற்றி விழா முடிந்ததும் படக்குழுவினர்களுக்கு சைவ மற்றும் அசைவ விருந்து வைக்கப்பட்டது. இந்த விருந்தில் சாப்பாடு அனைத்தும் அபாரமாக இருப்பதாக சாப்பிட்டவர்கள் கருத்து தெரிவித்த நிலையில் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தது தமிழ் நடிகர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் ஆகிய படங்களில் நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் நடத்தும் ’மாதம்பட்டி பாகசாலா’ என்ற கேட்டரிங் நிறுவனத்தின் மூலம் தான் இந்த விருது நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.