ஒரே வருடத்தில் 2வது மனைவியையும் விவாகரத்து செய்த தமிழ் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் நடிகர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் தற்போது இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்த ஒரே ஆண்டில் விவாகரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் நடிகர் மற்றும் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரருமான பாலா அஜித் நடித்த ’வீரம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து மனைவி அம்ருதாவை கடந்த ஆண்டு பாலா விவகாரத்து செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் நடிகர் பாலா கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி எலிசபெத் என்ற டாக்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணம் ஆகி ஒரு வருடம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் தற்போது பாலா - எலிசபெத் ஆகியோர் விவாகரத்து செய்து விட்டதாக தெரிகிறது. இதனை பாலா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நடிகர் பாலா உறுதி செய்துள்ளார். தனது வாழ்வில் மிகவும் வேதனையான நாட்கள் என பாலா தனது விவாகரத்து குறித்து கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாலாவின் முதல் மனைவி அம்ருதா சுரேஷ் இசையமைப்பாளர் கோபிசுந்தரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com