close
Choose your channels

நிறைமாத கர்ப்பிணியாக பிரபல நடிகரின் மகள்.. வைரலாகும் பிரக்னன்ஸி போட்டோஷூட்..!

Saturday, July 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல குணச்சித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கர் மகள் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கர்ப்ப கால புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக குணச்சித்திர நடிகராக இருந்து வரும் எம்எஸ் பாஸ்கர், தமிழ் திரை உலகில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் உள்ள நிலையில் இவரது மகள் ஐஸ்வர்யாவும் டப்பிங் கலைஞர் என்பதும் பல முன்னணி நடிகைகளுக்கு இவர் டப்பிங் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு எம்எஸ் பாஸ்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கும் சுதாகர் என்ற தொழில் அதிபருக்கும் திருமணம் நடந்த நிலையில் திருமணம் முடிந்த இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது ஐஸ்வர்யா கர்ப்பம் ஆகி உள்ளார்.

தான் கர்ப்பமானதை சமீபத்தில் தான் அவர் அறிவித்த நிலையில் தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment