பேரறிவாளனுடன் செம டான்ஸ் ஆடிய பிரபல நடிகர்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்த பேரறிவாளன் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் தனது தாய் மற்றும் தந்தையின் பிறந்த நாள் விழாவை பேரறிவாளன் கொண்டாடிய நிலையில் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் செம டான்ஸ் வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
பேரறிவாளன் தனது தந்தை குயிலின் 80வது பிறந்த நாள் மற்றும் தாயார் அற்புதம்மாளின் 75வது பிறந்த நாளை ஒருசேர திருப்பூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலுள்ள திருமண மண்டபத்தில் கொண்டாடினார்.
இந்த பிறந்தநாள் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.
இந்த விழாவின் இறுதியில் பறையிசை குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றபோது பேரறிவாளன் குழுவினருடன் இணைந்து நடனம் ஆடினார். உடனே மேடைக்கு வந்த சத்யராஜூம், பேரறிவாளனுடன் இணைந்து செம நடனமாடிய வீடியோக்கள் இணையதளங்களில் ஆகி வருகின்றன.
சத்யராஜ், பேரறிவாளன் நடனம் #Perarivalan #Sathyaraj #Dance pic.twitter.com/N2O6KrSIrA
— தமிழீழ ஆவணக்காப்பகம் (@te_archive) July 31, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com