close
Choose your channels

குடும்பத்தோடு மதம் மாறிய தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்

Wednesday, November 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குடும்பத்தோடு புத்த மதத்திற்கு தமிழ் நடிகர் ஒருவர் மாறியதன் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் நடித்த ’விருமாண்டி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சாய் தீனா. அதன்பிறகு அவர் விஜய் நடித்த ‘தெறி’, ’பிகில்’ , ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’வடசென்னை’ லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ ரஜினிகாந்த் நடித்த ’எந்திரன்’ உள்பட பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தார்.

மேலும் இவர் நடிகர் மட்டுமின்றி சமூக சேவை செய்பவர் என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பின்போது வாழ்வாதாரத்தை இழந்த பல மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் தான் வில்லன் என்றாலும் நிஜத்தில் இவர் ஹீரோ என்று பல திரையுலக பிரபலங்கள் இவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சாய் தீனா புத்த மதத்திற்கு குடும்பத்துடன் மாறியுள்ளார். புத்த பிக்கு ஒருவர் முன்னிலையில் அவர் புத்த மதத்துக்கு மாறி உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் சாய் தீனா புத்த மதத்திற்கு மாறியது குறித்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் நெட்டிசன்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment