பிளஸ் 2 தேர்வில் தமிழில் 100 மதிப்பெண் எடுத்த மாணவியின் வீட்டுக்கு சென்று வாழ்த்திய நடிகர்..!

  • IndiaGlitz, [Friday,May 12 2023]

சமீபத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் இரண்டு மாணவிகள் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்தனர் என்பது செய்தி வெளியானது. ஒருவர் 600க்கும் 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் நந்தினி என்பதும் இன்னொருவர் அரக்கோணத்தை சேர்ந்த லக்ஷ்யா ஸ்ரீ என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழில் 100 மதிப்பெண் எடுத்த லக்ஷ்யா ஸ்ரீ வீட்டிற்கு நடிகர் தாடி பாலாஜி நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஹிந்தி ஆதிக்கம் அதிகம் உள்ள நிலையில் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளது பாராட்டுக்குரியது என்று அவர் தெரிவித்தார். மேலும் மாணவியை லக்ஷ்யா ஸ்ரீ லட்சியம் நிறைவேற தான் முடிந்த அளவு உதவி செய்வேன் என்றும் அவர் பிகாம் படித்து சிஏ ஆக வேண்டும் என்று லட்சியத்தோடு உள்ளார் என்றும் அவரது லட்சியம் நிறைவேற தமது வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழில் 100 மதிப்பெண் பெற்ற மாணவியின் அருகில் நான் இருக்கிறேன் என்பது எனக்கு ஒரு பெருமையாக உள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள், அந்த திட்டங்களை பயன்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்,.

மேலும் விரைவில் தான் அரசியலுக்கு வந்து தன்னால் முடிந்த உதவிகளை பொதுமக்களுக்கு செய்வேன் என்றும் தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்றும் என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இணைந்து நான் மக்கள் பணியாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.

More News

35 வயதில் சைஸ் ஜீரோ.. தமிழ் நடிகையின் லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு..!

35 வயதான தமிழ் நடிகை சைஸ் ஜீரோ கட்டுடலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

தோனி சென்னையா? க்யூட்டாக கேள்வி கேட்ட சமந்தா.. வைரல் வீடியோ..!

தோனி ராஞ்சியை சேர்ந்தவர் என்பதை நம்பவே முடியவில்லை என்றும், அவர் சென்னையை சேர்ந்தவரா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது என க்யூட்டாக பேட்டியில் நடிகை சமந்தா கூறிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'பர்ஹானா' காட்சியை ரத்து செய்த தியேட்டர் நிர்வாகம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'பர்ஹானா' என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. படம் பார்த்த பலர் இந்த படம் மிகச்

படப்பிடிப்பு முடியும் முன்பே டப்பிங் முடித்த கமல்ஹாசன்.. என்ன ஒரு வேகம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் தான் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே இதுவரை தான் நடித்த காட்சிகளின் டப்பிங் பணியை முடித்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

திரையுலக பின்னணி இல்லாத நாயகி வேண்டும்: பாரதிராஜா அறிவிப்பு..!

தனது மகன் இயக்கும் முதல் படத்திற்கு திரையுலக பின்னணி இல்லாத நாயகி வேண்டும் என பாரதிராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: