அரைகுறை ஆடையுடன் ஆடுவது தான் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியா? தமிழ் நடிகர் ஆவேசம்..!

  • IndiaGlitz, [Sunday,November 05 2023]

கடந்த சில மாதங்களாக ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி சென்னை உள்பட பல பெரு நகரங்களில் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் பல இளைஞர்கள் சாலையில் நின்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியை தமிழ் நடிகர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ் நடிகர் ரஞ்சித் ஹேப்பி ஸ்ட்ரீட் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ’ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் ரோட்டில் ஆடுவது தனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது, எங்கிருந்துடா வர்றீங்க, எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவேன் என்றும் இது ஒரு கலாச்சார சீரழிவு என்றும் தெரிவித்தார்.

மேலும் ஹேப்பி ஸ்ட்ரீட், ஹேப்பி சண்டே ஆகியவை தாய்லாந்து சிங்கப்பூர் போன்ற நாடுகளின் கலாச்சாரம் என்றும் அதை நாம் நாட்டில் வளர விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஹேப்பி சண்டே ஹேப்பி ஸ்ட்ரீட் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதை விட நமது பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சியான வள்ளி கும்மி ஆட்டத்தை ஊக்குவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.