மனைவி குறித்து மோசமான கமெண்ட்: போலீஸில் புகார் செய்த தமிழ் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனது மனைவி குறித்து சமூக வலைத்தளத்தில் மோசமான கமெண்ட் செய்த நபர் குறித்து காவல்துறையில் தமிழ் நடிகர் ஒருவர் புகார் அளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபுசாலமன் இயக்கிய ’கயல்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் நடிகர் சந்திரன். இவர் ’கயல்’ சந்திரன் என்று தற்போதும் அழைக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கயல் சந்திரனுக்கும் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் அஞ்சன ரங்கன் என்பவருக்கும் இடையே கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2018 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது
சமூக வலைதளங்களில் அஞ்சன ரங்கன் பிரபலம் என்பதால் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ் குவிந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் அஞ்சனாவின் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ரசிகர் ஒருவர் நீங்கள் ஹீரோயினாக தாராளமாக நடிக்கலாம், உங்கள் கணவர் தான் சினிமாவில் இல்லை, நீங்களாவது நடித்தால் அவருக்கு உதவியாக இருக்கும்’ என்று பதிவு செய்து இருந்தார். மேலும் இதனை அவர் அஞ்சனாவின் கணவருக்கும் டேக் செய்திருந்தார்
இந்த கமெண்ட்ஸால் ஆத்திரமடைந்த கயல் சந்திரன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், ’இவர் நபர் போன்ற முகம் தெரியாத நபர் பலரும் நாகரீகம் தெரியாமல் கமெண்ட்ஸ் செய்வது கவலையாக இருக்கிறது. இவர் தன்னுடைய வீட்டில் உள்ள பெண்களை பாலியல் பலாத்கார ரீதியாக துன்புறுத்த மாட்டார் என நம்புகிறேன். இன்னும் சில நாட்களில் இவர் போலீசில் போடுவார் என்று எச்சரிக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com