எடப்பாடியார் ஆதரவாளர்களுக்கு வீடு கிடையாது: போர்டு எழுதிய மாட்டிய தமிழ் நடிகர்!

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு வீடு கிடையாது என தமிழ் நடிகர் ஒருவர் வாடகைக்கு வீடு விடப்படும் என்ற போர்டில் எழுதி மாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திரைப்பட துணை நடிகர் ஐசக் பாண்டியன். இவர் தனக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விடுவதற்காக போர்டு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் குடிகாரர், வடமாநிலத்தவர் மற்றும் எடப்பாடி அதிமுகவின் ஆதரவாளர்கள் அணுக வேண்டாம் என்று பதிவு செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

வீடு கேட்டு வரும் போது நான்கு கால்களில் தவழ்ந்து வருவார்கள் என்றும் வீடு கிடைத்த பிறகு இந்த வீடு என்னுடையது என்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில்தான் தமிழ்நாட்டு வேலைகளை வடமாநிலத்தவர்கள் கொடுத்தார் என்றும் தமிழ் மீது பற்று உள்ள நான் அவரது ஆதரவாளர்களுக்கு எப்படி வீடு கொடுப்பது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

துணை நடிகர் ஐசக் பாண்டியனின் இந்த போர்டு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.