`புதுப்பேட்டை', `விருமாண்டி' படப் புகழ் நடிகர் பாலா சிங் காலமானார்!

  • IndiaGlitz, [Wednesday,November 27 2019]

கோலிவுட் திரையுலகில் பல திரைப்படங்களில் வில்லன், குணசித்திர கேரக்டர்களில் நடித்த பிரபல நடிகர் பாலாசிங் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67

நாசர் நடித்து இயக்கிய ‘அவதாரம்’ என்ற படத்தில் அறிமுகமான நடிகர் பாலாசிங் அதன்பின்னர் இந்தியன், ராசி, மறுமலர்ச்சி, தீனா, விருமாண்டி, புதுப்பேட்டை, வேட்டைக்காரன், என கமல், அஜித், விஜய் உள்பட பல நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தில் ஒரு அரசியல்வாதியாக பாலாசிங் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே

நடிகர் பாலாசிங் கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலை ஒரு மணிக்கு அவர் காலமானதாகவும் செய்திகள் வந்துள்ளது. மறைந்த நடிகர் பாலாசிங் அவர்களுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

காதல் திருமணம் செய்த இளைஞரை தண்டவாளத்தில் தூக்கி போட்ட பெண்ணின் உறவினர்கள்

நெல்லை மாவட்டத்தில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞர் ஒருவரை பெண்ணின் உறவினர்கள் தூக்கி தண்டவாளத்தில் வீசி கொலை செய்ததாக பெண்ணின் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர் 

இரட்டை குழந்தைகள் அளவுக்கு பெரிய கிட்னி: கின்னஸ் சாதனையில் இடம்பெற முயற்சி

இரட்டைக்குழந்தைகள் அளவுக்கு எடை உள்ள மிகப்பெரிய கிட்னி ஒன்றை நோயாளி ஒருவரது உடலில் இருந்து சர்ஜரி செய்து மருத்துவர்கள் குழு ஒன்று அகற்றியுள்ளது.

உயிர் போகும் என்பது எனக்கு தெரியும்: எழுதி வைத்து உயிர் விட்ட இளைஞர்

'வேகமாக வண்டி ஓட்டினால் உயிர்போகும் என்பது எனக்குத் தெரியும், ஒருவேளை உயிர் போனால் யாரும் அழ வேண்டாம்' என தனது புது பைக்கில் எழுதி வைத்த வாலிபர் ஒருவர்

திருமணத்திற்கு முன்பே 34 வயது பெண்ணுடன் கள்ளக்காதல்: 24 வயது பாடகரின் மகன் கைது

தமிழ் திரையுலகில் கானா பாடல்கள் மூலம் பிரபலமானவர் பழனி. இவருடைய 24 வயது மகன் தரணி என்பவருக்கு சமீபத்தில் விஜயபானு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

30 நாளில் ஏன் இந்த முடிவு: 'கைதி' தயாரிப்பாளர் விளக்கம்

தளபதி விஜய் நடித்த மாஸ் திரைப்படமான 'பிகில்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியான நிலையில் இந்த திரைப்படத்துடன் எந்த படமும் வெளிவர தயங்கியது.