பிரபல தமிழ் நடிகர்-தயாரிப்பாளருக்குக் ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்ததை அடுத்து திரையுலகினார் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் பல படங்களை தயாரித்த நிலையில் பாலா இயக்கிய ’தாரை தப்பட்டை’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் நாயகன், வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஆர்கே சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த ‘விசித்திரன்’ என்ற படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷ் மனைவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது என்பதும் அந்த நிகழ்ச்சிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஆர்கே சுரேஷ், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். குழந்தைக்கு சில நிமிடங்கள் சுவாச பிரச்சனை இருந்ததாகவும், ஆனால் தற்போது குழந்தையின் உடல்நிலை கடவுள் அருளால் நன்றாக உள்ளது என்றும் ஆர்கே சுரேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது குழந்தையின் புகைப்படத்தையும் பதிவு செய்த நிலையில் அந்த குழந்தைக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினார் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
We are blessed with the boy baby . Unfortunately he had a breathing difficulties now by the grace of god he is fine . Pls keep us in your prayers 🙏 #omnamahshivay pic.twitter.com/15NKDTvcYF
— RK SURESH (@studio9_suresh) January 20, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments