இந்தியாவில் இந்த பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றது நான் ஒருவரே.. பிரபல இசையமைப்பாளர் பெருமிதம்..!
- IndiaGlitz, [Wednesday,March 22 2023]
தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிஎச்டி டாக்டர் பட்டம் பெற்று இருப்பதாகவும் இந்த துறையில் டாக்டர் பட்டம் பெற்றது இந்தியாவில் தான் ஒருவரே என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் விஷால் நடித்த ’ஆம்பள’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இதனை அடுத்து அவர் ’இன்று நேற்று நாளை’ ’தனி ஒருவன்’ ’அரண்மனை 2’ ’கத்தி சண்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார். அதுமட்டுமின்றி ‘மீசைய முறுக்கு’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த அவர் அதன் பின்னர் ’நட்பே துணை’ ’நான் சிரித்தால்’ ’சிவக்குமாரின் சபதம்’ ’அன்பறிவு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பிஎச்டி முடித்துள்ளதாகவும் இனிமேல் நான் டாக்டர் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் இது படித்து வாங்கிய பட்டம் என்றும் மரியாதைக்காக அளிக்கப்பட்ட டாக்டர் பட்ட அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் Music Entrepreneurship என்ற பிரிவில் பிஎச்டி முடித்துள்ளேன் என்றும் எனக்கு தெரிந்து இந்தியாவில் இந்த துறையில் பிஎச்டி பட்டம் பெறுவது இதுதான் முதல் முறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.