பா ரஞ்சித் தனது கருத்தை வாபஸ் பெறுவார்: ஆம்ஸ்ட்ராங் விவகாரம் குறித்து தமிழ் நடிகர்..!

  • IndiaGlitz, [Tuesday,July 09 2024]

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இது குறித்து பா.ரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் ஆவேசமாக சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார். குறிப்பாக திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு அவர் தனது எக்ஸ் கால பக்கத்தில் 7 கேள்விகளை கேட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பா ரஞ்சித்தின் கேள்விகளுக்கு சரவணன் அண்ணாதுரை உள்பட ஒரு சிலர் திமுக தரப்பிலிருந்து பதில் அளித்திருந்த நிலையில் தற்போது நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் பா ரஞ்சித் கேள்விகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

தோழர் ரஞ்சித் அண்ணனை இழந்த வேதனையில் வெளிவந்த வார்த்தைகளாக அந்த பதிவை எடுத்துக்கொள்கிறேன்.. மற்றபடி திமுக மீது அவர் வைத்த குற்றசாட்டுகளை அவரே திரும்ப பெற்றுக் கொள்வார் என நம்புகிறேன்.. என்று தெரிவித்துள்ளார்.

போஸ் வெங்கட் சொல்வது போல பா ரஞ்சித் தனது கருத்துக்களை மாற்றிக் கொள்வாரா அல்லது இன்னும் ஆவேசமாக திமுக தலைமையிலான அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

இந்த ஆண்டு 2 படம், அடுத்த ஆண்டு 2 படம்.. பிரியாணி பக்கெட்டை தூக்கும் கார்த்தி..!

கார்த்தி நடித்து முடித்துள்ள இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டும் இரண்டு படங்கள் வெளியாகும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி - சூரி.. 'காந்தாரா' பாணியில் ஒரு தமிழ்ப்படமா?

விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகிய இருவரும் 'விடுதலை' படத்தில் நடித்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இருவரும் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோவை

ஊட்டியில் ஒரு மொட்டை மாடி நீச்சல் குளம்.. பிகினியில் பளபளக்கும் 'கோட்' நடிகை .. இன்ப அதிர்ச்சி வீடியோ..!

தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்'  படத்தில் நடித்த நடிகை ஊட்டியில் மொட்டை மாடி நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் ஜாலியாக குளிக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ

'கல்கி' போல் குறைந்த நேரம் தான் 'இந்தியன் 2' படத்தில் வருகிறாரா கமல்? ஷங்கர் விளக்கம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன் 2' திரைப்படம் வரும் வெள்ளி என்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் படம் முழுவதும் வருகிறார்

செல்வ வளத்தை அள்ளி வார வாஸ்து ரகசியங்கள்! - ஆன்மீகக்ளிட்ஸில் வாஸ்து நிபுணர் ஹேமலதா சந்திரசேகரன்

வீட்டில் நிலையான செல்வ வளத்தை ஈர்க்கவும், வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவும் வாஸ்து சாஸ்திரம் உதவும் என்று நம்பப்படுகிறது.