பா ரஞ்சித் தனது கருத்தை வாபஸ் பெறுவார்: ஆம்ஸ்ட்ராங் விவகாரம் குறித்து தமிழ் நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இது குறித்து பா.ரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் ஆவேசமாக சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார். குறிப்பாக திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு அவர் தனது எக்ஸ் கால பக்கத்தில் 7 கேள்விகளை கேட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பா ரஞ்சித்தின் கேள்விகளுக்கு சரவணன் அண்ணாதுரை உள்பட ஒரு சிலர் திமுக தரப்பிலிருந்து பதில் அளித்திருந்த நிலையில் தற்போது நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் பா ரஞ்சித் கேள்விகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
தோழர் ரஞ்சித் அண்ணனை இழந்த வேதனையில் வெளிவந்த வார்த்தைகளாக அந்த பதிவை எடுத்துக்கொள்கிறேன்.. மற்றபடி திமுக மீது அவர் வைத்த குற்றசாட்டுகளை அவரே திரும்ப பெற்றுக் கொள்வார் என நம்புகிறேன்.. என்று தெரிவித்துள்ளார்.
போஸ் வெங்கட் சொல்வது போல பா ரஞ்சித் தனது கருத்துக்களை மாற்றிக் கொள்வாரா அல்லது இன்னும் ஆவேசமாக திமுக தலைமையிலான அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தோழர் ரஞ்சித் அண்ணனை இழந்த வேதணையில் வெளிவந்த வார்த்தைகளாக அந்த பதிவை எடுத்துக்கொள்கிறேன்.. மற்றபடி திமுக மீது அவர் வைத்த குற்றசாட்டுகளை அவரே திரும்ப பெற்றுக்கொள்வார் என நம்புகிறேன்.. @Udhaystalin @beemji pic.twitter.com/IxltJJL81B
— Bose Venkat (@DirectorBose) July 9, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com