முதல்முறையாக வெப் தொடரில் நடிக்கும் தமிழ் நடிகர்.. பூஜையில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் நடிகர் முதன்முதலாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் அதன் பூஜையில் சூப்பர் ஸ்டார் நடிகர் கலந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 80களில் அறிமுகம் ஆகி பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ரகுமான். ’நிலவே மலரே’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ’வசந்த ராகம்’ ’புரியாத புதிர்’ புதுப்புது அர்த்தங்கள்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். சூர்யா நடித்த ’சிங்கம்’ அஜித் நடித்த ’பில்லா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்த உள்ளார். சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கூட அவர் மதுராந்தகன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள நடிகர் ரகுமான், கே பாலசந்தரின் ‘காதல் பகடை’ உள்ளிட்ட ஒரு சில தொலைக்காட்சி சீரியலில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவர் ஒரு மலையாள வெப் தொடரில் நடிக்க உள்ளார். ’1000 பேபீஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடரின் பூஜை இன்று கொச்சியில் நடைபெற்றது. இந்த பூஜையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#actorrahman's first web series titled #1000Babies direct by #NjeemKoya in Malayalam started rolling at #Kochi Today. Megastar @mammukka was the chief guest for Pooja ceremony.@actorrahman @NEENA_GUPTA @AugustCinemaInd @ajay_64403 @johnsoncinepro@kerala_rahman pic.twitter.com/8H7w5J7oq6
— Johnson PRO (@johnsoncinepro) May 15, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com