பிரதமர் மோடி பயோபிக் படத்தில் தமிழ் நடிகர்.. எப்படி ஒப்புக்கொண்டார் பகுத்தறிவு நடிகர்?

  • IndiaGlitz, [Saturday,May 18 2024]

பாலிவுட்டில் பிரமாண்டமாக பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாரிக்கப்பட உள்ள நிலையில் இந்த படத்தில் மோடி கேரக்டரில் நடிக்க தமிழ் நடிகர் ஒருவர் ஒப்புக்கொண்டது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. திராவிட கொள்கைகளிலும் பகுத்தறிவு கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்ட அந்த நடிகர் எப்படி மோடி கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

முன்னாள் குஜராத் முதல்வரான மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார் என்பதும் 10 வருடங்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருக்கும் அவர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட பல அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகிய நிலையில் தற்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தில் பிரதமர் மோடி கேரக்டரில் நடிக்க நடிகர் சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ராமர் கோவில் உள்பட இந்துத்துவத்தில் தீவிரமாக இருக்கும் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில், பகுத்தறிவு கொள்கை கொண்ட திராவிட இயக்கத்தில் ஆர்வம் காட்டும் சத்யராஜ் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற கேள்வியை கோலிவுட் திரையுலகினர் பலர் கேட்டு வருகின்றனர்.

 

More News

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' தயாரிப்பாளரின் அடுத்த படம்.. 40வது படத்தில் அடியெடுத்து வைக்கும் ஹீரோ..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' என்ற வெற்றி திரைப்படத்தை தயாரித்த நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் மூலம் பிரபல ஹீரோ  

விஜய்சேதுபதியின் 'ஏஸ்'ஃபர்ஸ்ட் லுக்கில் உள்ள சுவாரஸ்யமான  விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  'ஏஸ்' ( ACE)' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

ரஜினி, கமல், விஜய்யை அடுத்து அஜித்.. மக்கள் செல்வனுக்கு அடித்த ஜாக்பாட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர்களின் படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி ,அடுத்ததாக அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக

'கோட்' படத்தின் முக்கிய பணி முடிந்தது.. வெங்கட்பிரபு கொடுத்த மாஸ் அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக செய்தி வெளியான நிலையில் இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக VFX

பவித்ரா ஜெயராமனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி தகவல்..!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரபல கன்னட சீரியல் நடிகை பவித்ரா ஜெயராமன் சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில் அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஒருவரும்