கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கொரோனா வைரஸ்க்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உள்பட பல துறையைச் சேர்ந்தவர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் திரையுலகைச் சேர்ந்த ஒரு சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியபோது ’கடந்த வாரம் எனக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்பதை தெரிந்து கொண்டேன். அதன் பின்னர் நான் வீட்டில் என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது ஓரளவு குணமாகி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் எனக்கு முழுவதுமாக ஒத்துழைப்பு அளித்த சுகாதார ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் குறித்து யாரும் பயப்படவேண்டாம் என்றும் அதே நேரத்தில் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுங்கள் என்றும், அடிக்கடி கைகளை கழுவி பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நிக்கி கல்ராணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.