தம்பி ராமையா இயக்கும் படத்தின் ஹீரோ-டைட்டில் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தம்பிராமையாவை அனைவருக்கும் ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் தெரியும், ஆனால் ஒரு இயக்குனர் என்பது வெகுசிலருக்கே தெரிந்த உண்மை. முரளி நடித்த 'மனுநீதி', வடிவேலு நடித்த 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' போன்ற படங்களை இயக்கியவர். தற்போது நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் மகனுக்காக மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
'உலகம் விலைக்கு வருது' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தம்பி ராமையா மகன் உமாபதி நாயகனாக நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'அதாகப்பட்டது மகாஜனங்களே' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உமாபதி ஹீரோவாக நடிக்கும் 'உலகம் விலைக்கு வருது' படத்தில் மிருதுளா முரளி, ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, ஒய்.ஜி.மகேந்திரன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், 'பவர் ஸ்டார்' சீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
பி.கே.வர்மா ஒளிப்பதிவில், தினேஷ் இசையமைப்பில், கோபிநாத் படத்தொகுப்பில் வைரபாலன் கலை இயக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments