ஹிப்ஹாப் ஆதி கனவுக்கு உயிர் கொடுக்கிறேன்: தமன்னா நெகிழ்ச்சி பதிவு..!

  • IndiaGlitz, [Wednesday,October 02 2024]

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் கனவுக்கு உயிர் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று தனது சமூக வலைதளத்தில் நடிகை தமன்னா பதிவு செய்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் ஆகிய துறைகளில் ஜொலித்துக் கொண்டிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் 'கடைசி உலகப்போர். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று ஆதி அறிவித்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியானது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், 'கடைசி உலகப்போர்' ஹிந்தி பதிப்பு டப் செய்யப்பட்டு நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. இதன் ட்ரெய்லரை நடிகை தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்தில் அவர் கூறியிருப்பதாவது:

கடைசி உலகப்போர் ஹிந்தி பதிப்பின் ட்ரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தில் ஆதியின் கனவுக்கு உயிர் கொடுப்பதில், அவர் பக்கம் நிற்பதில் பெருமை கொள்கிறேன்.

அதோடு, ’மகாராஜா’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நட்டி நடராஜ், போர் குறித்த பாதிப்புகளை சரியான விதத்தில் கூறியுள்ளார். இந்த உலகில் அமைதியே எல்லாவற்றையும் விட முக்கியமானது, படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், இந்த போர் உலகப்போராக மாறும் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் 'கடைசி உலகப்போர்' சரியான படம் என்று தமன்னாவின் பதிவுக்கு பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More News

CWC என்னுடைய பிறந்த வீடு, அந்த நாட்கள் ஆனந்தமானவை..... வெங்கடேஷ் பட்

பிரபல சமையற் கலைஞரும், குக் வித் கோமாளியின் 1,2,3 & 4 சீஸனின் ஜட்ஜாக இருந்த வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி புகழ் குரோஷியுடன் அளித்த ஜாலியான பேட்டி.

விஜய்யின் 'தளபதி 69' படத்தின் நாயகி இவர்தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 69 வது திரைப்படமான 'தளபதி 69' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம்

காந்தி பிறந்த நாளில் 'காந்தி டாக்ஸ்' வீடியோ..விஜய் சேதுபதி ரசிகர்கள் குஷி..!

அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியின் பிறந்த நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் "காந்தி டாக்ஸ்" என்ற படத்தின்

துணை முதல்வர் உதயநிதிக்கு  திரையுலகம் சார்பில் பாராட்டு விழா: ஆர்கே செல்வமணி

நடிகராக இருந்து துணை முதல்வர் ஆகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு கிடைத்தால் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

ரஜினியின் உடல்நிலை.. மருத்துவர்கள் கூறிய லேட்டஸ்ட் தகவல்.. 'கூலி' படப்பிடிப்பு தாமதமாகுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை