close
Choose your channels

ஹிப்ஹாப் ஆதி கனவுக்கு உயிர் கொடுக்கிறேன்: தமன்னா நெகிழ்ச்சி பதிவு..!

Wednesday, October 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் கனவுக்கு உயிர் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று தனது சமூக வலைதளத்தில் நடிகை தமன்னா பதிவு செய்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் ஆகிய துறைகளில் ஜொலித்துக் கொண்டிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் 'கடைசி உலகப்போர். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று ஆதி அறிவித்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியானது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், 'கடைசி உலகப்போர்' ஹிந்தி பதிப்பு டப் செய்யப்பட்டு நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. இதன் ட்ரெய்லரை நடிகை தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்தில் அவர் கூறியிருப்பதாவது:

"கடைசி உலகப்போர்" ஹிந்தி பதிப்பின் ட்ரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தில் ஆதியின் கனவுக்கு உயிர் கொடுப்பதில், அவர் பக்கம் நிற்பதில் பெருமை கொள்கிறேன்.

அதோடு, ’மகாராஜா’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நட்டி நடராஜ், போர் குறித்த பாதிப்புகளை சரியான விதத்தில் கூறியுள்ளார். இந்த உலகில் அமைதியே எல்லாவற்றையும் விட முக்கியமானது, படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், இந்த போர் உலகப்போராக மாறும் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் 'கடைசி உலகப்போர்' சரியான படம் என்று தமன்னாவின் பதிவுக்கு பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment