லெஜண்ட் சரவணனுக்காக தமன்னா செய்த காரியம் என்ன தெரியுமா? வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ’ தி லெஜண்ட்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. ஒரு புதுமுக நடிகரின் படம் என்ற எண்ணமே இல்லாமல் மாஸ் நடிகரின் படம் போல் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என சரவணன் நடித்த முதல் படமே ஒரு பான் - இந்தியா வெளியாக உள்ளது திரையுலகினருக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியமாகவும் உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சரவணன் உள்பட படக்குழுவினர் உலகம் முழுவதும் சுற்றி புரமோஷன் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்திற்காக புரமோஷன் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: ’நானும் சரவணன் சாரும் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் இணைந்து நடித்தோம். அப்போதே அவருக்கு நடிகராக வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணம் இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படம் நிச்சயம் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜூலை 28-ஆம் தேதி இந்த படத்தை அனைவரும் திரையரங்குகளில் சென்று பாருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
Hearty congratulations to #TheLegendSaravanan Sir ahead of his #TheLegend movie's release on the 28th of July!
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 19, 2022
I wish the Directors @jdjeryofficial, music director @Jharrisjayaraj Sir and the entire team of #TheLegendMovie the Best!
Catch the movie in cinemas near you! pic.twitter.com/9iEKIOEhHf
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com