close
Choose your channels

நடிகை தமன்னாவின் வேற லெவல் வொர்க்-அவுட்: வைரல் வீடியோ

Wednesday, April 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தமன்னா, கடந்த 16 ஆண்டுகளில் அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா பாலிவுட் திரை உலகிலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார்.

தற்போது அவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு துறையில் சுமார் 6 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் தமன்னாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 16 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக பெரிய அளவில் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார். உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் எடுக்கும் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.