வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் தமன்னா.. 10 கிலோ எடை குறைந்ததா? வைரல் வீடியோ..!
- IndiaGlitz, [Monday,May 22 2023]
நடிகை தமன்னா வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து 10 கிலோ எடையை குறைக்க இருப்பதாக கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா என்பதும் தற்போது அவர் சிரஞ்சீவி உடன் ’போலோ சங்கர்’ ரஜினியுடன் ’ஜெயிலர்’, சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ’அரண்மனை 4’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை தமன்னா இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 21 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படபிடிப்புக்கு பின்னர் தற்போது தீவிரமாக ஒர்க்அவுட் செய்து வருவதாகவும் 10 கிலோ எடையை குறைப்பதை தனது முழு இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார். பயிற்சியாளரின் உதவியுடன் அவர் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.