தமன்னாவை ராதையாக மாற்றிய பேஷன் டிசைனர்.. கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாகவே ராதை கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அந்தப் புகைப்படங்களில் அச்சு அசல் ராதை போலவே தமன்னா இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்களை எடுத்த பேஷன் டிசைனர் கரண் டொரனி என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து கூறிய போது ’தமன்னா இந்த ப்ராஜெக்ட்டை ஒப்புக் கொண்டவுடன், நான் உங்களிடம் சரண் அடைகிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நான் செய்கிறேன், என்னை பொருத்தவரை நீங்கள் என்னை ராதாவாக மாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையை இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
அவருடைய நம்பிக்கைக்கு நான் அநீதி இழைக்க மாட்டேன் என்பதை அறிந்து அந்த நம்பிக்கையை பெறுவதற்காக கடுமையாக உழைத்தேன். ஒரு சில நேரத்தில் 10 டேக்குகள் ஆனாலும் கூட ஒவ்வொரு டேக்கும் முடிந்த பிறகு நீங்கள் விரும்பும் அவுட்புட் கிடைத்ததா என்று என்னிடம் தமன்னா கேட்டுக்கொண்டே இருப்பார். எனது படைப்பாற்றலுக்கு அவர் பொறுமையும் நம்பிக்கையும் கொடுத்தார். நான் மகிழ்ச்சியாகும் வரை தமன்னா அந்த செட்டை விட்டு நகரவில்லை. உங்களுக்கு தேவையானது என்னிடம் இருக்கிறதா என தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார்.
ஒரு இயக்குனராக எனக்கு அது மிகவும் அவசியமாக இருந்தது, மேலும் அவருடைய வார்த்தை ஆன்மீகத்தின் வெளிப்பாடாக இருந்தது என்பதை நான் புரிந்து கொண்டேன். நாங்கள் இருவரும் தெய்வத்தை உணர்ந்த தருணங்கள் அவை, ஒவ்வொரு டேக் முடிந்தவுடன் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வோம். எல்லாம் சரியாக நடந்தது. இதற்கு கிருஷ்ணரின் ஆசீர்வாதம் எங்களுக்கு இருந்ததாகவே உணர்கிறோம்.
இன்று நாங்கள் ஒரு மிக சிறப்பான ஒரு பணியை முடித்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com