close
Choose your channels

தமன்னாவுடன் இணையும் சுஹாசினி-ரேவதி

Monday, November 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுதேவாவுடன் தமன்னா நடித்த 'தேவி' மூன்று மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் 'பாகுபலி 2' படத்தில் நடித்து வருகிறார். மேலும் விஷாலுடன் தமன்னா நடித்த 'கத்திச்சண்டை' மற்றும் சிம்புவுடன் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
இந்நிலையில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன 'குயீன்' படத்தின் ரீமேக்கில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். சுஹாசினி திரைக்கதையில், ரேவதி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் தமன்னா இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குயீன் ரீமேக்கில் நடிப்பது குறித்து தமன்னா கூறுகையில், 'குயீன்' படத்தைப் பார்த்தவுடன், இதன் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என விரும்பினேன். நான் விரும்பியது போலவே இதன் ரீமேக்கில் நடிக்கவிருப்பது சந்தோஷத்தை அளிக்கிறது. ரேவதி மேடம் என்னை வைத்து இயக்குவது, எனக்கு ஏன் அவ்வளவு முக்கியமானது என்றால் `தேவி' படத்தில் வரும் கதாபாத்திரத்துக்கு அவர்தான் எனக்கு உந்துதல்' என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் நடித்த கங்கனா ரனாவத்துக்கு தேசிய விருது கிடைத்தது என்பது அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம். அதேபோல் தமன்னாவுக்கும் தேசிய விருது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment