தமிழ் உள்பட 3 மொழிகளில் தமன்னா பாடல்.. இன்னொரு 'காவாலா' 'அச்சச்சோ?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் உள்பட 3 மொழிகளில் தமன்னாவின் பாடல் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
’ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ ’அரண்மனை 4’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அச்சச்சோ’ ஆகிய இரண்டு பாடல்கள் அந்த படங்களின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியதாக கூறப்படும் நிலையில் தற்போது தமன்னாவின் இன்னொரு திரைப்பட பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவான ’வேதா’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய இடத்தில் நடித்துள்ள தமன்னாவின் பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் 4 கோடி பார்வையாளர்களை கடந்து உள்ள நிலையில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெரும் என்று கூறப்படுகிறது. இந்த பாடல் ‘காவாலா’ ‘அச்சச்சோ’ பாடல் போல் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Prepare to be moved by the love song #ZarooratSeZyada ❤️
— Zee Studios (@ZeeStudios_) August 9, 2024
Releasing tomorrow in Hindi, Tamil, and Telugu ❤️🩹🎵#Vedaa in cinemas on 15th August in Hindi, Tamil & Telugu! 🇮🇳@TheJohnAbraham #Sharvari @nowitsabhi @tamannaahspeaks @nikkhiladvani @monishaadvani @madhubhojwani… pic.twitter.com/ShEsBB2c6f
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com