தமிழ் உள்பட 3 மொழிகளில் தமன்னா பாடல்.. இன்னொரு 'காவாலா' 'அச்சச்சோ?

  • IndiaGlitz, [Saturday,August 10 2024]

தமிழ் உள்பட 3 மொழிகளில் தமன்னாவின் பாடல் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

’ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ ’அரண்மனை 4’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அச்சச்சோ’ ஆகிய இரண்டு பாடல்கள் அந்த படங்களின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியதாக கூறப்படும் நிலையில் தற்போது தமன்னாவின் இன்னொரு திரைப்பட பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவான ’வேதா’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய இடத்தில் நடித்துள்ள தமன்னாவின் பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் 4 கோடி பார்வையாளர்களை கடந்து உள்ள நிலையில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெரும் என்று கூறப்படுகிறது. இந்த பாடல் ‘காவாலா’ ‘அச்சச்சோ’ பாடல் போல் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்குவது இந்த இயக்குனரா? இன்னொரு ரூ.100 வசூல் ரெடி..!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 'மூக்குத்தி அம்மன் 2' படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

'சூர்யா 44' படப்பிடிப்பில் விபத்து.. சூர்யாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவரின் அதிர்ச்சி தகவல்..!

கடந்த சில நாட்களாக 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வரும் நிலையில் திடீரென இன்று நடந்த விபத்தில் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி பெருமாள் ரகசியங்கள்: ஸ்ரீகவி சொல்லும் அற்புத தத்துவங்கள்

ஆன்மீக சிந்தனையாளர் ஸ்ரீகவி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் திருப்பதி பெருமாள் மற்றும் திருமலை நம்பி பற்றி ஆழமாக ஆராய்ந்துள்ளார்.

அர்ஜெய்- லிங்கா கூட்டணியில் உருவாகும் கேங்ஸ்டர் ஃபேண்டஸி

தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக உருவாகும்  கேங்ஸ்டர் ஃபேண்டஸி படத்தை ஸ்மால் ஃபாக்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன வெங்கட் பிரபு.. இதுதான் காரணம்..!

இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து செய்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.