நான் போட்டு கொண்ட விதியை நானே மீறியது ஏன்? படுக்கையறை காட்சி குறித்து தமன்னா விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை தமன்னா கடந்த 2016ஆம் ஆண்டு அளித்த பேட்டியில் முத்தக்காட்சி. படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தான் விதித்த விதியை தானே மீறியது ஏன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை தமன்னா தற்போது ‘ஜீ கர்தா’ என்ற வெப் தொடரில் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த இரண்டு தொடரில் அவர் படு கிளாமராக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியது.
இதனை அடுத்து தமன்னா மீது நெட்டிசன்கள் கடும் விமர்சனம் முன்வைத்தனர். 2016 ஆம் ஆண்டு முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தற்போது ஏன் அந்த காட்சிகளை நடிக்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தனர்
இதற்கு பதிலளித்த தமன்னா, ‘2023 பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என மற்றவர்கள் சொல்வது ஏன்? என்ற கேள்வி எழுப்பினார். என்னை பற்றி கேலி செய்பவர்கள் கிண்டல் செய்பவர்களை நான் கண்டுகொள்ளப் போவதில்லை என்றும் எனது 18 வருட திரையுலக வாழ்க்கையில் முத்தமிட்டு படுக்கையறை காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என்று விதிகளை போட்டுக் கொண்டது உண்மைதான்.
ஆனால் தற்போது ஏன் அந்த விதிகளை போட வேண்டும் என்று யோசித்தேன், அடுத்த கட்டத்திற்கு வளர வேண்டும் என்றால் இந்த விதிகளை மீற வேண்டும் என்பது எனக்கு புரிந்தது. அதனால் தான் நான் போட்ட விதிகளை நானே மீறி நடித்தேன்.
எனது காதலர் விஜய் வர்மா என்னை நன்கு புரிந்து கொண்டவர், அதனால் எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com